தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மெட்ரோ, வெள்ள நிவாரணம் என மறுத்து வந்த ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டிய சம்பவம் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, குலக்கல்வி என பலவற்றை புகுத்துவதற்கான முன்னெடுப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த அராஜக போக்குக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என தமிழ்நாடே கொதித்தெழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, மக்களும் தங்கள் வீட்டு வாசலில் இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக கோலமிட்டு கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாசிச போக்குடன் செயல்படும் மோடியின் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GetOutModi ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டானது.
இந்த நிலையில், நேற்று (பிப்.21) கள ஆய்வுக்காக கடலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் வரி தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும். ஆனால் அதை செய்ய மாட்டோம். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில் 'எதற்கு கேட்கிறாய் வரி?' என்று இணையத்தில் பலரும் ஒன்றிய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.73 ரூபாய் திரும்பக் கிடைகிறது.
2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி. உ.பி-யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி, அவர்களுக்கு ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி.
உத்தர பிரதேசம், பீகாருக்கு 200 சதவீதம் பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதியினை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
அந்த அம்சங்களின் பட்டியல் வருமாறு :
1. கல்வி நிதி குறைப்பு
2. SC/ST மேம்பாட்டு நிதி நிறுத்தம்
3. இரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு
4. புயல் நிவாரண நிதி மறுப்பு
5. சாலை வளர்ச்சி திட்டங்களில் நிதி ஒதுக்கீடு குறைவு
6. மருத்துவமனை அமைக்கும் திட்டங்களில் தாமதம் (எ.கா: மதுரை AIIMS)
7. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை காரணமாக தமிழ் மொழிக்கு ஆதரவு குறைவு
8. தேசிய திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைந்த பங்கு
9. தொழில்துறை மானியம் குறைப்பு
10. சுற்றுச்சூழல் தொடர்பான நிதி ஒதுக்கீடு குறைவு
11. நகர்ப்புற மேம்பாட்டு நிதி குறைப்பு
12. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களில் குறைவான நிதி
13. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் போனது
14. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு
15. தொழிலாளர்கள் நலத்திட்டங்களில் நிதி குறைப்பு
16. தமிழகத்தில் புதிய ஒன்றிய நிறுவனங்கள் ஏற்படுத்த மறுப்பு
17. இயற்கை பேரிடர் நிவாரண நிதி குறைப்பு
18. குடிநீர் வசதிக்கான ஒன்றிய நிதி குறைப்பு
19. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் மெதுவாக செயல்பாடு
20. மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் தாமதம்
21. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான ஒன்றிய நிதி தாமதம்
22. தேசிய நிறுவனங்களின் தலைமையகம் தமிழ்நாட்டில் அமைக்க மறுப்பு
23. ஒன்றிய அரசின் தொழில் முனைவோர் ஊக்கத்திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைவான ஆதரவு
24. தமிழ்நாட்டிற்கு கடலோர பாதுகாப்பு திட்டங்களில் குறைந்த முக்கியத்துவம்
25. ஒன்றிய அரசின் விவசாய நிதி திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைவு
26. தமிழ்நாட்டில் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களை அமைக்காமல் தவிர்ப்பு
27. ஒன்றிய நிதி ஆதரவுடன் நடைபெறும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் குறைவு
28. தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான ஒன்றிய நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டில் குறைவு
29. ஒன்றிய அரசு உதவியுடன் செயல்படும் திறன் மேம்பாட்டு திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைவான பங்கு
30. மாநிலத்தில் ஒன்றிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைப்பதில் மேன்மை அடையாத நிலை.
இந்த நிலையில் தான் கல்விக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றியை அரசு பார்த்து உங்களுக்கு நாங்கள் வரியை தர முடியாது என்ற சொல்ல எவ்வளவு நேரம் ஆகிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேட்டது இணையத்தில் ’எதற்கு கேட்கிறாய் வரி?’ என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.