தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் : காலகாலமாக இருந்த வந்து நடைமுறை தான் இது : அமைச்சர் சேகர்பாபு !

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் : காலகாலமாக இருந்த வந்து நடைமுறை தான் இது : அமைச்சர் சேகர்பாபு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டனில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்தரவு. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் இறைவனின் முன்பு அனைவருக்கும் சமம் என்ற வார்த்தைக்கு உயிர் கிடைத்திருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல, ஏற்கனவே காலகாலமாக இருந்த வந்து நடைமுறை தான். இடையில் கொரோனாவின் போது கனகசபை தரிசனத்தை தடை செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்குப் பிறகு பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவில் : காலகாலமாக இருந்த வந்து நடைமுறை தான் இது : அமைச்சர் சேகர்பாபு !

அதனை எதிர்த்து தீட்சகர்கள் நீதிமன்றத்தை அணுகினாலும், கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கனக சபை மீது ஏறி தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தீச்சக்கரசர் தொடர்ந்த வழக்கில் தான் நீதியரசர்கள் இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை கருத்தை கேட்டிருக்கிறார்கள். மாறாக தரிசனத்திற்கு தடை விதிக்கவில்லை. தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் எப்படி தரிசனம் செய்யலாம் என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த சட்ட போராட்டம் இன்று நேற்று அல்ல 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய போராட்டம்.

banner

Related Stories

Related Stories