தமிழ்நாடு

”பா.ஜ.கவை காப்பாற்ற நினைக்கும் அ.தி.மு.க அடிமைகள்” : எம்.எம்.அப்துல்லா MP கண்டனம்!

பா.ஜ.க பரப்பும் அதே பொய்யை அ.தி.மு.க அடிமைகளும் பரப்புகிறார்கள்.

”பா.ஜ.கவை காப்பாற்ற நினைக்கும் அ.தி.மு.க அடிமைகள்” : எம்.எம்.அப்துல்லா MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”பா.ஜ.க எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அ.தி.மு.க அடிமைகள்” என தி.மு.க அயலக அணிச் செயலாளரும், எம்பியுமான எம்.எம்.அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ”பா.ஜ.க எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அ.தி.மு.க அடிமைகள். ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் தி.மு.கவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள்.

PM SHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பா.ஜ.க பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.

இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அ.தி.மு.கவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே தி.மு.கவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அ.தி.மு.க. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அ.தி.மு.கவின் நிரந்தரக் கொள்கை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories