தமிழ்நாடு

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் ரூ.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.2.2025) திருநெல்வேலி, பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தினசரி சந்தையில் 40 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் காய்கனி சந்தை மற்றும் டவுன் நயினார் குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முக்கிய கடமையாகும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

நகர்ப்புர வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்திட, பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் வசதிகள், நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பூங்காக்களை அமைத்தல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 10 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையில் வணிக வளாகம், 14 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையில் அபிவிருத்திப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கூடுதலாக, 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையினை மேம்படுத்தும் பணிகள், 14 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் டவுன் பாரதியார் பள்ளி அருகில் சிறுவர் விளையாட்டு அரங்கம், 11 கோடியே 3 இலட்சம் செலவில் டவுன் நயினார் குளம் தெற்கு பகுதியை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories