தமிழ்நாடு

காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது : சுட்டுப்பிடித்து காவல்துறையினர் அதிரடி !

காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது : சுட்டுப்பிடித்து காவல்துறையினர் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்து கொண்டு வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் வந்து ஆய்வு செய்தார். அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பின்னர் போலிசாரின் விசாரணையில் சிப்காட் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை பிடிக்க போலிசார் அவர் இருக்கும் இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அப்போது சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் தாக்க வந்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் வரை காலுக்கு கீழ் முட்டி பகுதியில் சுட்டு பிடித்து கைது செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹரியை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிசார் அனுமதித்தனர்.

banner

Related Stories

Related Stories