தமிழ்நாடு

Jamboree நடத்துவது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை, தமிழ்நாட்டுக்குப் பெருமை : துணை முதலமைச்சர் உரை!

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Jamboree நடத்துவது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை, தமிழ்நாட்டுக்குப் பெருமை : துணை முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று, வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழாவையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டையும், சிறப்பிக்கிற வகையில் மிக சிறப்பான, பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய அளவிலான பெருந்திரளணியை (Jamboree-ஐ) தொடங்கி வைப்பதிலும் நாங்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

இங்கே சிறப்புக்குரிய அணிவகுப்பை நடத்தி எங்களை எல்லாம் வரவேற்ற Scouts and Guides மாணவர்களுக்கு எங்களுடைய அன்பையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் 2000-ஆம் ஆண்டில் Scouts and Guides-ன் 50-ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் வைரவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் இங்கே வெற்றிகரமாக துவங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

It is truly an honor for me to inaugurate the Diamond Jubilee celebrations of the Bharat Scouts and Guides and Muthamizh Arignar Dr. Kalaignar Centenary Jamboree.

On November 7, 2024, I released the 75th Foundation Day commemorative flag and the logo of the Bharat Scouts and Guides. Our Honourable Chief Minister will grace this event at the valedictory ceremony on February 2nd. Our Dravidian Model Government has allocated Rs.39 crores for conducting this prestigious event in Trichy. I am happy to note that about 20 thousand students are participating in this 7-day event and more than 2000 tents have been erected in the place here.

Jamboree நடத்துவது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை, தமிழ்நாட்டுக்குப் பெருமை : துணை முதலமைச்சர் உரை!

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் 3 மாதங்களுக்கு முன்பு இருந்தே நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், மாநில சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் அருமை நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அரசியல்வாதி, அமைச்சர் பொதுவாக வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் தான் அவர் வலம் வருவார். இங்கு இருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் Scout Dress-ல் தான் வந்திருந்தார். நான் கூட ஏதோ ஒரு ஸ்கூல் பையன் என்னை பார்க்க வந்திருக்கிறார் என்று நினைத்தேன். பிறகு அருகில் வந்தபிறகு தான் தெரிந்தது அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வந்திருக்கிறார் என்று. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போயிருக்கிறார். அவருக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்.

இந்த நிகழ்வுக்காக பணியாற்றிய பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வந்துள்ள வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும், கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாக அமையும்.

அதே போல, அவர்களுடைய கலாச்சாரம் பழக்கவழக்கங்களை நம்முடைய தமிழ்நாட்டு குழந்தைகள் நீங்கள் அறிந்து கொள்ளவும், இந்த Jamboree மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

This jamboree provides a wonderful opportunity for all the participants to explore the rich diversity of our country and our Tamil Nadu's culture.

சாரண இயக்கத்தை தோற்றுவித்த Robert Baden-Powell அவர்களுடைய நோக்கமும் இதே தான். அவர் தனது தந்தையை சிறுவயதிலேயே இழந்துவிட்ட காரணத்தால், அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். சேவை செய்யும் எண்ணத்தை குழந்தைகளுக்கு புத்தகங்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுப்பதை விட, அவர்களுக்கு களத்தில் Outdoor Activities மூலம் சொல்லிக் கொடுப்பது எளிது என்று Baden Powell எண்ணினார்.

அதனுடைய விளைவாகத் தான் இந்த சாரண, சாரணியர் இயக்கத்தினை அவர் 1907-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இதை துவக்கி வைத்தார். நம்முடைய இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு 1950-இல் பாரத சாரண, சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டது.

The Scout and Guide movement is an organization that has proved that children's natural playful nature and perseverance can be harnessed to achieve creative and constructive goals. The theme of this jamboree, Empowered Youth and Developed India, highlights the vital need to nurture disciplined, educated, and self-oriented youth to build a brighter and more developed country.

The future of our nation depends on the young minds gathered here. This jamboree will sharpen your skills and guide you toward becoming invaluable assets to our country.

In this camp, you will gain essential survival skills, engage in meaningful community services, and cultivate strong leadership qualities. You will also focus on personal development, including discipline, self-care, and other vital life skills. Through these experiences, you will grow into responsible citizens with a lifelong commitment to serving our community.

இது மாதிரியான அனுபவங்கள் எல்லாம் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த Jamboree-ல் பல மாநிலங்களில் இருந்து வந்து, மொழி, மதம் ஜாதி போன்றவற்றை எல்லாம் மறந்து, இந்தியாவின் குடிமகன் என்கிற ஒரே எண்ணத்தில் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் கூடி 7 நாட்கள் நீங்கள் எல்லாம் camp life நடத்தப் போகிறீர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய எண்ணமும் கூட இதேதான். மனிதர்கள் யாரும் ஒருவருக்கொருவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதாபிமானத்தோடு, மனிதப் பண்புகளை உயர்த்தி வாழ வேண்டும் என்பது தான் அவருடைய ஒரே குறிக்கோள். கலைஞர் அவர்கள் கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களில் மிகப் புரட்சிகரமான திட்டம் என்றால் அது பெரியார் சமத்துவபுரம் திட்டம் தான். அனைத்து மக்களும் எந்தவித ஏற்றத் தாழ்வு இல்லாமல் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி வாழ வேண்டும் என்பது தான் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த பெரியார் சமத்துவபுரம் திட்டம்.

This scheme aimed to unite families from all parts by providing government-built homes in a single community, aptly named as Samathuvapuram. Today, across the State numerous Samathuvapurams exist across Tamil Nadu, and I would like to refer to them as a permanent jamborees.

எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை முன்னிட்டு நீங்கள் Jamboree நடத்துவது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை, தமிழ்நாட்டுக்குப் பெருமை என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அதே போல, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு முன்வந்த அத்தனை பொறுப்பாளர்களுக்கும் இந்த Jamboree-யில் பங்கெடுக்க வந்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

banner

Related Stories

Related Stories