தமிழ்நாடு

76-வது குடியரசு தின விழா : சென்னையில் தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் 76-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.

76-வது குடியரசு தின விழா : சென்னையில் தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பாதக்கம் விருதை தீயணைப்பு காவலர் வெற்றிவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் கோட்டை அமீர்மத நல்லிணக்கப் பதக்கத்தை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனிமாவட்டத்தைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது. பிறகு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் பெ.சின்னகாமணன், கி.மகாமார்க்ஸ், க.கார்த்திக், கா.சிவா, ப.பூமலை ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

banner

Related Stories

Related Stories