பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராக இருப்பவர் ஷா. இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், 15 வயது சிறுமியின் செல்போனுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. மதுரை தெற்கு வாசல் குற்றப்பிரிவு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கேள்வி எழுப்பும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், 15 வயது சிறுமிக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.