தமிழ்நாடு

பா.ம.கவில் வெடித்த மோதல் - செய்தியாளர்கள் மீது தாக்குதல்!

பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.கவில் வெடித்த மோதல் - செய்தியாளர்கள் மீது தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், முகுந்தன் என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். (முகந்தன் ராமதாஸ் மூத்த மகளின் மகன் ஆவார். )

அப்போது அன்புமனி ராமதாஸ், ”கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகந்தனுக்கு பதிவியா? என மேடையிலயே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென

கோவமடைந்த, ராமதாஸ் ”நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு போங்க” என பேசினார்.தந்தை மகனுக்கும் இடையே கறுத்து வேறுபாடு ஏற்பட்டதை பார்த்து கட்சி தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

இதனிடையே ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் கருத்து வேறுபாடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியாளர்கள் காமராஜ், சீமான் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களது ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த மற்றொரு பத்திரிக்கையாளர் அக்பர் என்பவர் மீதும் பா.ம.க தொண்டர்கள் தாக்குதல் நடத்தி அவரது சட்டையை கிழத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories