தமிழ்நாடு

ஈரோடு : விசைத்தறி தொழிலாளர்களோடு உரையாடிய முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோட்டில் விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

ஈரோடு : விசைத்தறி தொழிலாளர்களோடு உரையாடிய முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட, விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மற்றும் மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 750 அலகுகள் வரை வழங்கப்பட்டு வந்த விலையில்லா மின்சாரம் 3.03.2023 முதல் 1000 அலகுகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு விசைப் பலகைகள் உற்பத்தியின் போது நூல்கள் அறுந்து விழுவதை தடுக்கவும், சாதாரண விசைத்தறிகளில் சீராகவும் மற்றும் நிலையான தரத்துடனும் துணிகள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் 5000 விசைத்தறியில் மின்னணு விசைப் பலகைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, விசைத்தறி செறிவு மிக்க பகுதிகளில் 5000 விசைத்தறிகளில் மின்னணு விசைப் பலகைகள் பொருத்தப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காகவும், இப்பணியில் ஈடுபட்டு வரும் நெசாவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், விசைத்தறி கூடத்திற்கு நேரில் சென்று அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்திடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.12.2024) ஈரோடு மாவட்டம், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இயங்கி வரும் இரண்டு விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், நெசவாளர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த விசைத்தறி கூடங்களில் 24 விசைத்தறிகள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories