தமிழ்நாடு

”மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலேசியாவில் 10th Asia Pacific Deaf Games - 2024 நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தபோட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றது. இதில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் பதக்கம் வென்ற மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி பதக்கம் வென்ற வீரர்களுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பதவில், ”10th Asia Pacific Deaf Games - 2024 போட்டியில் பங்கேற்க உதவிடும் வகையில், நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும்,

‘எலைட்’ திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர் - வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம்.நம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம், அவர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories