தமிழ்நாடு

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீறார்களுக்கு ‘பாதை’ திட்டம்! : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சரின் அறிவுரைப்படி புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில், அரசினர் கூர்நோக்கு சிறார்களுக்கான 'பாதை' திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

 ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீறார்களுக்கு ‘பாதை’ திட்டம்! : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில், அரசினர் கூர்நோக்கு சிறார்களுக்கான 'பாதை' திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,

“முதலமைச்சரின் அறிவுரைப்படி "பாதை" திட்டம் கில்லிசில் உள்ள அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் சின்ன சின்ன குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்குள்ள சிறார்களுக்கு மன உளவியல் ஆலோசனை வழங்குவது, நடத்தை மாற்றம், மது மற்றும் போதை பழக்கத்திற்கான சிகிச்சை அளித்தல், ஆக்கபூர்வமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள தனித் திறன்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.

 ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீறார்களுக்கு ‘பாதை’ திட்டம்! : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

இங்கு விசாரணையில் உள்ள சிறார்களுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்பு அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் . அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த திட்டம் தொடர்ந்து மற்ற இல்லங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது என்றார்.

சிறார்கள் ஓவியம், நடனம், புகைப்படம் எடுப்பது, சமையல், தையல் எனை சிறார்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சிறார்கள் எதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அந்த கலைகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். அரசு தேர்வு எழுதுவதற்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இப்படி பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, சிறார்கள் மீண்டும் சீர்திருத்த பள்ளிக்கு வரக்கூடாது என்பதில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து குழந்தைகள் இல்லமும் முறையாக துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் 827 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories