தமிழ்நாடு

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார் : ரவுடிக்கு மருத்துமனையில் சிகிச்சை !

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார் : ரவுடிக்கு மருத்துமனையில் சிகிச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 5 வது தெருவை சேர்ந்த அறிவழகன் (24) என்பவர் மீது திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் விசாரணைக்காக இவர் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

எனவே இவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதனிடையே இவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து நேற்று அங்கு சென்ற போலீசார், இவர் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதை அறிந்து சென்னைக்கு வந்தனர்.

அதன்படி இன்று காலை 5.45 மணியளவில் துணை கமிஷனரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் இவர் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். அப்பொழுது அறிவழகன் போலீஸ் வருவதை பார்த்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை ஒருமுறை சுட்டுள்ளார்.

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார் : ரவுடிக்கு மருத்துமனையில் சிகிச்சை !

இதில் போலீசாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து தற்காப்பிற்காக எஸ்.ஐ.பிரேம்குமார் அறிவழகனை முட்டிக்கு கீழ் சுட்டுள்ளார். இதில் அறிவழகனுக்கு வலது முழங்காலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து போலீசார் அறிவழகனை மீட்டு ஸ்டான்லி கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அறிவழகன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் ஒரு பட்டாகத்தி, 6 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories