தமிழ்நாடு

"தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்க காரணம் துணை முதலமைச்சர் உதயநிதிதான்" - அமைச்சர் பொன்முடி !

"தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்க காரணம் துணை முதலமைச்சர் உதயநிதிதான்" - அமைச்சர் பொன்முடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் வடக்கு பகுதி கழக இளைஞரணி சார்பாக இதயம் கொள்கையின் குடியிருப்பு உதயம் மக்களின் உடன்பிறப்பு என்ற தலைப்பில் குடிசை மாற்று குடியிருப்பில் உள்ள 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அம்பேத்கரை பற்றி பேச எவ்வளவோ செய்திகள் உள்ளது. அம்பேத்கர் பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எவ்வளவோ சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அம்பேத்கரின் புகழைப் பரப்பியவர் நமது தளபதி அவர்கள். அவர்களின் வாரிசு தான் உதய் அவர்கள்.

முதலமைச்சருக்கு மகனாக பிறந்தாலும் இளைஞர்களுக்கு வழி நடத்தக்கூடிய வகையில் இருந்து கொண்டிருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவர் ஒரு செங்கல்லை வைத்துக்கொண்டு பல்வேறு நபர்களை ஆட்டி படைத்தார். படிக்கின்ற காலத்திலிருந்து கொள்கை பிடிப்போடு வளர்ந்தவர் அவர். அதனால் தான் சனதனத்தை பற்றி பேசுகிறார். அவரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது உதயநிதி படங்கள் கூட சமூக நீதிப் பேசியது.

"தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்க காரணம் துணை முதலமைச்சர் உதயநிதிதான்" - அமைச்சர் பொன்முடி !

தற்போது தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்குகிறது என்ற நிலைமையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். அவர் தமிழ்நாட்டில் சுற்றாத இடம் கிடையாது என்ற அளவு ஒவ்வொரு ஊரிலும் சென்று ஆய்வு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதற்கேற்ற அறிவுரைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த அளவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் தான் நமது உதயநிதி ஸ்டாலின்.

இயக்கத்தை வருங்காலத்தில் நடத்தக்கூடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்ய வேண்டும். , இது கொள்கை கூட்டணி என திருமாவளவன் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள் அனைவரும் நாங்கள் கொள்கை கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நேரடியாக கலத்திற்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். மற்றவர்களைப் போல் வீட்டில் இருந்து கொண்டு கருத்து கூறவில்லை" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories