தமிழ்நாடு

சென்னையில் ரூ.279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப்பணிகள் : அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.29.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 திட்டப்பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார்.

சென்னையில் ரூ.279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப்பணிகள் : அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய நல்லாட்சியில் தமிழ்நாட்டின் தலைநகராகமாகவும், இந்தியாவிலும், உலக அளவிலும் முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திகழ்ந்து வரும் பெருநகர சென்னை மாநகராட்சியில் பாலங்கள், சாலைகள், மேம்பாட்டு திட்டங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு நாள்தோறும் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்கள் உடல்நலம் பேணும் வகையில் 8 புதிய விளையாட்டுத் திடல்கள், புனரமைக்கப்பட்ட 2 நீர்நிலைகள், மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கிற்கான 2 புதிய பூங்காக்கள், புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் சுகாதார மைய கூடுதல் கட்டடம், நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் என ரூபாய் 29.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மேலும் 12 நீர்நிலைகளைப் புனரமைத்தல், மெரினா கடற்கரையில் நீலக் கொடி கடற்கரை திட்டம், 3 மழைநீர் வடிகால் பணிகள், 291 அம்மா உணவகங்களின் மேம்பாட்டு பணிகள், 10 புதிய ஆரோக்கிய நடைபாதைகள், 3 சமூக நல மையங்கள் கட்டும் பணி, செவிலியர் மற்றும் பெண்கள் தங்கும் விடுதி, 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள், சைதாப்பேட்டை காய்கறி மற்றும் பழங்கள் சந்தை, 3 இடங்களில் சென்னை நகர நுழைவுக்கான சாலை பெயர்ப் பலகைகள், 3 நடைபாதைகள் மேம்படுத்துதல், 7,644 தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள், 148 பள்ளிக்கூடங்களை சீரமைத்தல், 12 கால்நடை கொட்டகைகள் அமைக்கும் பணிகள், நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம், என ரூபாய் 279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 106 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 453 நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories