கடந்த 2023 – 2024 ம் நிதியாண்டில் விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போது அப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023 ம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரனங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கும் 33 வகையான விளையாட்டு உபகரனங்களின் தொகுப்பை வழங்கும் விழா அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துதறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " தமிழ்நாட்டில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இளைஞர்கள் நலனில் மிகவும் அக்கரை காட்டி வருகின்றனர்.
இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். அதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விளையாட்டு உபகரனங்களை கிராமபுற இளைஞர்கள் சரியாக பயன்படுத்தி தங்களது உடலை பேணி பாதுகாக்க வேண்டும்.
33 வகையான விளையாட்டு உபகரனங்களை இளைஞர்களுக்கு வழங்கபட்டு வருகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஈடுபடுகிறார். இதன் மூலமாக 5 அல்லது 10 ஆண்டுகளில் விளையாட்டில் தமிழக இளைஞர்கள் தேசிய அளவில் சிறப்பிடம் பிடிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.