தமிழ்நாடு

ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

ரூ.18.10 கோடியில் திருநெல்வேலியில் பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைத்தல் மற்றும் புதுக்கோட்டை பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி.

ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 18.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம்  அமைத்தல் மற்றும் புதுக்கோட்டை பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

மேலும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், பல்நோக்கு விளையாட்டரங்கம், விளையாட்டு விடுதி கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த அரசு விழாவில், திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையிலும், ஆர்வத்துடனும் உள்ளனர். அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காகவும், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ஒரு விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

இதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று (16.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், விஜயபாதி கிராமத்தில் 14.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு பயிற்சி கூடம், உள்ளரங்க கையுந்துபந்து மைதானம், உள்ளரங்க இறகுப்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், தடகள பாதை, நீளம் தாண்டுதல், கால்பந்து மைதானம், கூடைபந்து, கபாடி, கோ-கோ, மற்றும் கைப்பந்து ஆடுகளங்கள், கேலரி வசதி, உடை மாற்றும் அறை மற்றும் சுற்று சுவர் ஆகிய வசதிகளுடன் பயிற்சி மையத்துடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், 3.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் கூடுதல் பணிகளாக இறகுப்பந்து செயற்கை ஆடுகளம், குடிநீர் வசதி, ஒளிரும் மின்விளக்குகள் வசதி, உள்ளிட்ட  பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இன்றைய தினம் மொத்தம் 18.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

banner

Related Stories

Related Stories