ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக பீகார் மாநிலம் தானாபூர் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம் போல் அரக்கோணம் வந்து காட்பாடி நோக்கி புறப்பட்டு சென்றது.
ரயில் கிளம்பி சில நிமிடங்களில் ரயில் என்ஜின் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டு புகையுடன் தீ பொறி வந்துள்ளது. இதனைத் கண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சோளிங்கர் ரயில் நிலையத்தில் தீயணைப்பு சாதனங்கள் உடன் தயார் இருந்த ரயில்வே இருந்த ரயில்வே பணியாளர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.அதை தொடர்ந்து மேலும் அதே இன்ஜினுடன் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து மாற்று எஞ்சின் கொண்டு வரப்பட்டு அது சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.