தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் : தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாட்டால் ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை !

ஃபெஞ்சல் புயல் : தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாட்டால் ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் பொதுபோக்குவரத்துக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

அதனை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்த‌ நிலையில் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

மேலும் மரக்கழிவுகள் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் தண்ணீர் அகற்றும் பணி மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் : தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாட்டால் ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை !

அந்த வகையில் மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டர்கள் மற்றும் கனரக மோட்டார் பம்புகள் வைத்து உடனடியாக தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர். நேற்றைய தினம் பல்வேறு பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிலையில் உடனுக்குடன் அகற்றப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

நேற்று முதலே கடும் மழையும் பொருட்படுத்தாமல் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் மணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காலை முதலே சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாய்ந்த மரங்கள் மரக்கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை வரை ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கபட்ட 9,10,300 பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டும் 2,75,000 பேருக்கும், நேற்று காலை முதல் இரவு வரை 6,35,300 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories