வங்கக் கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது! புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை வரை வெளியே வர வேண்டாம் என பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு SMS அனுப்பியுள்ளது புதுச்சேரி அரசு!
செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள் குறித்து நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில் தற்பொழுது 19.31 அடி உயரம் நிரம்பியுள்ளது.
5 நீர்த்தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11.76 டிஎம்சி-இல் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது.
- நீர்வளத்துறை
சென்னை வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த வி.சக்திவேல் அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நாளை (01.12.2024) நடைபெறவிருந்த CAIIB தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தேர்வு மையத்திற்கான புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்!”
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாங்கிங் அண்ட் பைனான்ஸ் இணை இயக்குனர் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது!
தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்ட முதியவர்களை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தது சென்னை பெருநகர காவல்துறை!
ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதை அடுத்து 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 19 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தவிர்த்து, பொதுமக்களுக்கு துணை நிற்கும் விதமாக, மணலி, சடையன்குப்பம், இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்டப் பொருட்களை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சென்னையில் இரவு 10 வரை மிதமான மழையே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை அரசு ஒருபுறம் எதிர்கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், உதவி தேவைப்படுவோர்க்கு முன்னணியில் நின்று உதவிட கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room-ஐப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
பெறப்படும் கோரிக்கைகளை, களத்தில் பணியாற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற - மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்களிடம் கொண்டு சென்று, உரிய உதவிகள் கிடைக்க ஒருங்கிணைக்கும் கழகத்தின் பணி தொடரும்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு, 044-22200335 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும்.
சென்னை - ஏற்காடு விரைவு ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும்.
சென்னை - கொல்லம் சிறப்பு விரைவு ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும்.
சென்னை - மும்மை லோக்மான்ய சிலக் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்.
சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மாலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும்.
- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
”சென்னையில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. புயலை எதிர்க்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
இயற்கை சீற்றங்களை கடந்த காலங்களில் ஒற்றுமையுடன் எதிர்க்கொண்டு மீண்டு வந்துள்ளோம். அதுபோல் இப்போதும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வருவோம். இந்த இயற்கை பேரிடரை வென்றிடுவோம்.”
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சென்னைக்கு அருகே 100 கி.மீ தொலைவில் Fenjal புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று மாலை Fenjal புயல் கரையைக் கடக்கக்கூடும்.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 70 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும்.
புயல் கரை அருகே வரும் போது, அதன் வேகம் குறையும்.
- வானிலை ஆய்வுமைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி!
”Fenjal புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை(1.12.2024) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.”
- அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை, விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. - மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு தீவிர மழைப்பொழிவு இருக்கிறது.
- வானிலை ஆய்வு மையம் தகவல்!
மழை நீர் தேங்கும் இடங்களில், உடனடியாக மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
புயலின் காரணமாக மரங்கள் விழுந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
“பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது. அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஃபெங்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம். காற்றின் வேகம் அதிகரிப்பதால், காலை வரை பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளிவர வேண்டாம் என அறிவுறுத்தல்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.
ஃபெஞ்சல் புயல் தொடர்பான உதவிகளுக்கு அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room-ஐ 08069446900 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்!
- திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிவிப்பு!
சென்னை ராயபுரத்தில் அதிகனமழை மற்றும் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு. இன்று காலை நிலவரப்படி 449 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 3,745 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக, காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் நாளை (01.12.2024) காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடர்பாக பொதுமக்கள் உதவி கேட்க 044 27666746, 044 27664177 எண்களையும், 94443 17862, 94989 01077 வாட்ஸ்அப் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
புயல் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் படி அறிவுறுத்தினார்.
சென்னையில் அதிகனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் சீற்றத்திற்கு இடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
“ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால், தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டுள்ளது!
புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், மாவட்டங்களின் நிலவரம் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதிகனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும். - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, RBI சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காற்று, கனமழை தாக்கத்தால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவை இன்று முழுவதுமாக நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சாலைகளில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்.மா சுப்பிரமணியன்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் மழைக்கால நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் கனமழையுடன் கூடிய புயல் காற்று வீசி வருவதால், சென்னை நகரத்திற்குட்பட்ட அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் வேகம் அதிகரித்து, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ் அருகில் உள்ள வீராங்கல் ஓடையில் மழைநீர் தங்குதடையின்றி சீராக செல்லும் காட்சி!
சென்னையில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், சென்னை மெட்ரோ வழக்கமாக இயக்கப்படுகிறது. - சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்!
சென்னையில் அதிகனமழை மற்றும் புயல் சீற்றம் காரணமாக சிறிய ரக விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முடிவு. இன்று பகல் 2 மணிக்கு மேல் சிறிய ரக விமானங்கள் ரத்து என இண்டிகோ நிறுவனம் தகவல்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொள்ள இருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக ரத்து.
கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை துறைமுகத்தில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 14ஆம் நாள் நடைபெறும் என அறிவிப்பு.
சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொது மக்களின் வசதி கருதி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
புயல் கரையை கடக்கும் போது அதிகனமழையுடன் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் ECR மற்றும் OMR சாலைகளில் மட்டும் மாநகர் பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அதை தவிர்த்து அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் உள்ளது என சென்னை மாநகராட்சி.