தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் : மக்களை பாதுகாக்கும் பணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கனமழையை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

ஃபெஞ்சல் புயல் : மக்களை பாதுகாக்கும் பணியில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபென்சல் புயலாக நேற்று உருவானது. இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது, எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புயல் கரையை கடக்கும் போதும், அதற்கு பின்னரும் தொடர்ந்து கண்காணித்து, மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, டெமலஸ் சாலை பம்பிங் ஸ்டேஷன் தெரு பகுதியில் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். மேலும், ஓட்டேரி நல்லா கால்வாய், காந்தி கால்வாய், ரயில்வே கிராஸ் ஓவர் கால்வாய் ஆகியவை சேருகின்ற இடத்தில், மழை நீர் வெளியேறும் விதத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதேபோல்,கல்யாணபுரம் பக்கிங்காம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளையும், வட சென்னை பேசின் பாலம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் மூலம் மழை நீர் வெளியேறும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

banner

Related Stories

Related Stories