சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலிய மாணவர் உணவு கூடம் சி எஸ் ஆர் நிதி மூலம் ஸ்கேன் கருவிகள் மற்றும் கண் நுண்னோக்கி கருவி, மருந்து தகவல் மையம், மற்றும் தமிழ் மன்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்பொழுது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து வடசென்னை மக்களின் மருத்துவ தேவைகளை தயவு செய்கின்ற வகையில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எம்ஆர்எப் நிறுவனத்தின் சி எஸ் ஆர் நீதிபதிகளுடன் 50 லட்சம் மதிப்பீட்டிலான ஸ்கேன் கருவிகள் கொடுத்துள்ளார்கள். அது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் 60 லட்சம் மதிப்பீட்டில் கண் நுண்ணோக்கி கருவிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நுண்நோக்கி கருவிகள் ஸ்டான்லி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாது ரூ.25 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டிருக்கும் சமையல் கூடம் ஒன்றும் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ட்ரக் இன்பர்மேஷன் சென்டர் என்கின்ற வகையில் மருந்து தகவல் மையம் ஒன்று சி எல் பெய்டு மேத்தா என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ட்ரக் இன்பர்மேஷன் சென்டரை பொறுத்தவரை ஒவ்வொரு மருந்தையும் எப்படி உட்கொள்வது எவ்வளவு அளவு உட்கொள்வது என்னென்ன நோய்களுக்கு என்னென்ன மாதிரியான மருந்துகளை உட்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களை நோயாளிகளுக்கு அறிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் மிகவும் வசதியாகவும், மருத்துவர்கள் கூட அந்த மருந்துகளை எப்படி கையாள்வது என்று விவரங்களை அறிந்து கொள்வதற்காகவும் மருந்து கையிருப்பை தெரிந்து கொள்வதற்கும் ஒரு புதிய தகவல் மையம் ஸ்டான்லி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட ஒன்று அதையும் தற்போது திறந்து வைத்திருக்கிறோம். அதோடு மட்டுமல்லாது இந்த மருத்துவமனையை பொருத்தவரை அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு வகைகளில் அதனுடைய வளர்ச்சி என்பது உயர்ந்து வருகிறது.
அதன் காரணமாக பயனாளர்கள் நோயாளிகள் அரசு மருத்துவ சேவையை அதிகம் பயன்படுத்த தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நோயாளிகள் எண்ணிக்கையை காட்டிலும் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இங்கே மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அற்ற மருத்துவமனைகளில் ராஜீவ் காந்தி மருத்துவமனையாக இருக்கட்டும் பெயர் மருத்துவமனைகளில் 3000, 4000 ரூபாய் செலவாகிற திட்டம் இங்கு ஆயிரம் ரூபாய்க்கு செயல்படுத்தப்படுகிறது.
வடசென்னை பொறுத்தவரை தொழிலாளர்கள் மிகுந்து இருக்கக்கூடிய பகுதி என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இந்த வளாகத்தில் மற்றும் 13 கோடி ரூபாய் செலவில் செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் ஒன்று 43 642 சதுர அடி பரப்பில் கட்டும் பணிகள் தரைத்தளம் மட்டும் ஐந்து தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் மாணவியர் விடுதி என்கின்ற வகையில் தரை தளத்துடன் கூடிய ஆறு தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்று கட்டும் பணி முதலமைச்சர் நிதி ஆதாரத்தை தந்து 28 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இரண்டாவது தளம் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு முதலமைச்சர் அனுமதித்து 8 லட்சத்து 855 சதுர அடி பரப்பில் 118 கோடி ரூபாய் செலவில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்று அமைக்கும் பணிக்காக பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சரியாக 150 கோடி ரூபாய் செலவிலான கட்டிடங்கள் இந்த ஒரு மருத்துவமனையில் மட்டுமே கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிட பணிகள் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை உருவாக்குகின்ற வகையில் மாணவர்களிடையே தமிழ் பற்றை உருவாக்குகிற வகையில் தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது அந்த தமிழ் மன்றத்திற்கான நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளும் தற்போது தரப்படவிருக்கிறது.
மேலும், இன்று ஒன்றிய அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது, குரங்கம்மை பாதிப்புக்கு உள்ளான ஒருவர் கண்டறியப்பட்டு, அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, ஆய்வு செய்த பிறகு குரங்கமை இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன் ஒன்றிய அரசை தொடர்பு எந்த மருத்துவமனைக்கு வந்தார் எந்த நாட்டில் இருந்து வந்தார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மைக்கான கண்காணிப்பு பணிகள் தொடர்ச்சியாக, தனிமைப்படுத்துகிற அறையும் மருத்துவமனை ஒன்றும் தயார் நிலையில் இருக்கிறது. எல்லா விமான நிலையங்களிலும் குரங்கமை எப்படி இருக்கும் மருத்துவர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளும் டிஜிட்டல் பதாகைகளிலும் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டெங்கு பருவமழையின் போது பரவக்கூடியது. மக்களிடையே பொதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவின் வீரியம் ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது. இருப்பினும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இவ்வாண்டு 5 மரணங்கள் ஏற்பட்டுள்ளது" என்றார்.