தமிழ்நாடு

ஃபார்முலா 4 : பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஃபார்முலா 4 போட்டியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஃபார்முலா 4 : பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து நடத்தும் இந்த ஃபார்முலா 4 போட்டியானது ஆகஸ்ட் 31ம் மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.போட்டிகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், ஃபார்முலா 4 போட்டிக் குறித்த தலைமைச் செயலத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”ஃபார்முலா 4 போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பொதுமக்கள் இலவசமாக போட்டியை கண்டுகளிக்கலாம். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு, தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படவுள்ளது.இரவு 10:30 வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories