தமிழ்நாடு

”Kalaignar Sports Kit திட்டம் திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

Kalaignar Sports Kit திட்டம் திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”Kalaignar Sports Kit திட்டம் திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின் போது திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த 726 கிராம ஊராட்சிகளுக்கு 1048 எண்ணிக்கையிலான Kalaignar Sports Kit-ஐ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராமப்புற பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு அதிக வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்த ஊராட்சிகளுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

33 வகையான விளையாட்டுகளுக்கான உபகரணங்களைக் கொண்ட Kalaignar Sports Kit திட்டம், கிராமப்புறத்தில் உள்ள விளையாட்டுத் துறை திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும். தமிழ்நாட்டில் இருந்து 16 பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு சாதித்து வருகிறது

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்பெரும் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories