தமிழ்நாடு

இரண்டாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை தொடக்கம் : தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் !

நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மக்களுடன் முதல்வர்” இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

இரண்டாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை தொடக்கம் : தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேர “மக்களுடன் முதல்வர்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவை மாநகரில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் மாநிலம் முழுவதும் 2,058 முகாம்கள் நடத்தி, 8 இலட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை தொடக்கம் : தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் !

நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள கோரிக்கைகளுக்குக் கிடைத்த தீர்வினால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், தற்போது இந்த திட்டம் ஊரகப் பகுதிவாழ் மக்களுக்கும் நீடிக்கப்படவுள்ளது. அந்த வகையில் தருமபுரியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசுத் துறைகள் அடையாளம் காணப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories