தமிழ்நாடு

காலநிலை மாற்றத்தை தாங்கும், வெள்ளத்தை தணிக்கும் திட்டம்! : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களால் வெளியிடப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு!

காலநிலை மாற்றத்தை தாங்கும், வெள்ளத்தை தணிக்கும் திட்டம்! : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்றைய நாள் (20.06.24), மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை காலை, மாலை என இரு அமர்வுகளாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தொடரின் தொடக்கத்தில், நீர்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கப்படுவதற்கு முன்பு,

சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வைக்கு, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களால், கொள்கை விளக்கக் குறிப்பு வழங்கப்பட்டது.

அக்குறிப்பில் இடம்பெற்றவை பின்வருமாறு,

காலநிலை மாற்றத்தை தாங்கும் வெள்ளத்தை தணிக்கும் திட்டம்!

காலநிலை பருவ மாற்றம் வெப்ப மண்டல பகுதிகளில் காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால்,

தற்போதைய நீர் தேவைக்கும் விநியோக விகிதத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும், வெள்ளத்தை தாங்கும் நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்கவும், சென்னை மாநகர நீர் வளங்கள் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வெள்ளத்தை தணிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 91% நிறைவு!

2024- 25ம் ஆண்டு காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களில்,

காலநிலை மாற்றத்தை தாங்கும், வெள்ளத்தை தணிக்கும் திட்டம்! : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!

ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் 5338.68 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் 919 பணிகளுக்கு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகளை/ ஆதாரங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி கடந்த மே 31ம் தேதி வரை 91% பணிகள் முடிவு பெற்று, மீதமுள்ள பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

கனிம கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்!

அரசின் முனைப்பான தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 2023- 24ம் நிதியாண்டில் உரிய அனுமதியின்றி கனிமங்களை கடத்திய 5245 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு அபராதமாக ரூபாய் 17.43 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3891 குற்றவியல் வழக்குகள்/முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கனிம கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவை மற்றும் பாசன தேவை!

பாலாற்றின் நீரை நம்பி வாழும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை!

உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி, கர்நாடகாவின் காவிரி படுகையிலோ மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தை தாங்கும், வெள்ளத்தை தணிக்கும் திட்டம்! : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!

அத்திக்கடவு அவினாசி திட்டம்!

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக ரூ.1700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.

84 திட்டங்களில் 53 திட்டங்கள் முடிந்தது!

நீர் வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 84 திட்டங்களில் 53 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரப்படுகிறது.

தடுப்பணைகள், அணைக்கட்டுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு!

கடலூர், மயிலாடுதுறை திருவண்ணாமலை, மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 3 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணிக்கு ரூ.103.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.55 கோடியில் தொடங்கப்படும்.

banner

Related Stories

Related Stories