தமிழ்நாடு

”பிரதமர் மோடியை மூலையில் உட்கார வைத்த தமிழ்நாடு” : ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

இனி மோடியின் ஆட்டம் பலிக்காது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

”பிரதமர் மோடியை மூலையில் உட்கார வைத்த தமிழ்நாடு” :  ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் 40/40க்கு வெற்றி பெற்றுக் கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தி.மு.க கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தங்கபாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ” இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத பெருமை தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது. 40க்கு 40 வென்று இந்தியாவே நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஒரு தேர்தலில் ஒரு பிரதமர் தமிழ்நாட்டிற்கு ஒருமுறை வருவதே கடினம். ஆனால் மோடி எட்டு முறை வந்தார். அப்போது, தி.மு.கவை முடித்துவிட்டு தான் மோடி போவார் என சிலர் வாய்பேசினர். ஆனால் இன்று மோடியை தமிழ்நாட்டு மக்கள் மூலையிலே உட்கார வைத்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பா.ஜ.க சார்பில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலமாக இந்த வேலை நடந்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

தி.மு.கவை குடும்ப அரசியல் என்று பேசுகிறார்கள். ஆனால் இன்று புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்களில் 16 பேர் பா.ஜ.கவின் அரசியல் வாரிசுகள். 243 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 பேர் அரசியல் வாரிசுகள்.

1952 லிருந்து இதுவரை இஸ்லாமியர்கள் இல்லாத அமைச்சரவை இருந்தது கிடையாது. ஆனால் இன்று ஒன்றிய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. இது எந்த அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க வெறுப்பில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மோடி ஆட்சி எத்தனை ஆண்டு காலம் இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டணியில் சண்டை உருவாகியுள்ளது. இதனால் மோடி ஆட்டம் இனி பலிக்காது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories