தமிழ்நாடு

இனி தரமான சம்பவம் இருக்கு... திமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியல் ரெடி - முதலமைச்சர் அறிவிப்பு!

தி.மு.க நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இனி தரமான சம்பவம் இருக்கு... திமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியல் ரெடி - முதலமைச்சர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்களும்;

மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும்;

மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும்;

மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி அவர்களும்,

மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும்,

மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி., அவர்களும்,

மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., அவர்களும்,

இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories