தமிழ்நாடு

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் 3 ஆண்டுகளில் 1,740 கோவில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபு !

கடந்த மூன்று ஆண்டுகளில் 1,740 திருக்கோவில்களுக்கு குடகுடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் 3 ஆண்டுகளில் 1,740 கோவில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கிற்கான பந்தக்கால் நடுவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு பந்தக்காலை நட்டு வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பல்வேறு வழக்குகள் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக தடைபட்டிருந்த திருப்பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது. இதுவரை 6038 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.மேலும் 6000 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. நிலங்களை அளவிட்டு கல் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பதாகைகள் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது .

ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 348 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு கல்பதிக்கப்பட்டு இருக்கிறது. திருப்பணிகளை பொறுத்த வரை சட்டமன்ற அறிவிப்பின்படி மூன்றாண்டுகளில் சுமார் 9520 திருக்கோவில்களுக்கு 3814 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத திருப்பணிகளில் 10,727 கோடி செலவில் 1957 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் கோவிலில் பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இந்த திருக்கோவிலை பொருத்தவரை 1958 ஆம் ஆண்டு தான் திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் நான் 400 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கன்னியாகுமரியில் இருக்கின்ற ஆதி கேசவன் பெருமாள் கோயிலுக்கு திருப்பணிகள் நடைபெற்றது. கோவில் குளங்கள் புரணமைக்கப்பட்டுள்ளது.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் 3 ஆண்டுகளில் 1,740 கோவில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபு !

பாம்மன் கோவிலை பொறுத்த வரை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் முதற்கட்டமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம் 12ஆம் தேதி குடமுழகு நடைபெற உள்ளது. அதன் நிகழ்வாக இந்த திருத்தளத்தில் கால்கோல் விழா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பாம்பன் சுவாமிகள் பொறுத்தவரை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அவருடைய வரலாற்று புத்தகத்தை புதுப்பித்து இருக்கின்றோம். அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் இந்த பகுதியில் பெரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி இருக்கின்றோம்.இப்படி பல்வேறு கோவில்களை திருப்பணிகள் நடைபெற்ற வருகிறது.

மறு பதிவு செய்யப்பட்ட சுவாமியின் சரித்திரம் என்னும் நூலை இந்த ஆட்சியை ஏற்பட்ட பிறகுதான் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் 108 இசை கல்லூரியில் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்வாகம் பைரவாகன சேவை காட்சிகள் விளக்குகின்ற வகையில் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பாம்பன் சுவாமி திருக்கோவிலில் திருப்பணிகளை நிறைவு செய்து அதன் பிறகு வரைவு திட்டத்தை தயார் செய்து என்னென்ன பணிகள் எல்லாம் இந்த திருக்கோவிலில் மேற்கொள்ளலாம் என்பதை திட்டமிட்டு தொடர் நடவடிக்கையாக அனைத்து பக்தர்களும் மகிழ்கின்ற அளவிற்கு இந்த சமய அறநிலைத்துறை இந்த திருக்கோவிலை திருப்பணிகளை மேற்கொள்ளும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories