தமிழ்நாடு

40/40 மாபெரும் பெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற இந்தியா கூட்டணி MPக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்தியா கூட்டணி MPக்கள் வாழ்த்து பெற்றனர்.

40/40 மாபெரும் பெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற இந்தியா கூட்டணி MPக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மே 2021-ல் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி, மக்களின் அமோக வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, நல்லாட்சி நடத்தி வருகிறது.

அதன் அடையாளமாக மக்களின் பேராதரவோடு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி இன்று (6.6.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வெற்றி பெற்ற கழக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் வாழ்த்துகள் பெற்றிட அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர்.

வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முகாம் அலுவலகத்திலிருந்து, அண்ணா அறிவாலயம் செல்லும் வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வெற்றியாளர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், க. செல்வம், கதிர் ஆனந்த், ஆ. மணி, சி.என். அண்ணாதுரை, தரணிவேந்தன், மலையரசன், .டி.எம். செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அருண் நேரு, முரசொலி, தங்க தமிழ்ச்செல்வன், ராணி ஸ்ரீகுமார் ஆகியோரும்;

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, சுதா, கே. கோபிநாத், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் ஆகியோரும்;

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துரை வையாபுரி அவர்களும்; இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி அவர்களும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன், வை. செல்வராஜ் ஆகியோரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே. பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories