தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலரவே மலராது” : கனிமொழி MP அதிரடி!

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என கனிமொழி எம்.பி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலரவே மலராது” : கனிமொழி MP அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனிமொழி MP கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்வில் பேசிய கனிமொழி MP,"முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் அவருக்கு மிகப்பெரிய பரிசு தந்திருக்கிறோம். 40 இடங்களிலும் வெற்றி பெற்று அவரது பாதங்களில் சமர்ப்பித்து இருக்கிறோம். அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று தமிழ்நாட்டில் தாமரை மலராது, மலராது, மலரவே முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்.

சுயமரியாதை, சமூக நீதிக்கு எதிராகச் செயல்படக் கூடிய எந்த ஒரு இயக்கத்திற்கும் தமிழ்நாட்டில் எப்போதும் இடமில்லை. எல்லோரும் இங்குச் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற அத்தனை வித்தியாசங்களையும் உடைத்து எறியக்கூடிய இயக்கம் தான் தி.மு.க. இதை எதிர்க்கக்கூடிய யாருக்கும் இந்த மண்ணில் இடமில்லை.

சிலர் திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களைக் காட்டிலும் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இன்று உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories