தமிழ்நாடு

”மோடி தெய்வமகன் அல்ல டெஸ்ட் டியூப் பேபி” : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!

மக்களுக்கான என குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என நடிகர் பிகராஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

”மோடி தெய்வமகன் அல்ல டெஸ்ட் டியூப் பேபி”  : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா - 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜுக்கும், ‘மார்க்ஸ் மாமணி’ விருதை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்.

பின்னர் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், "உடம்புக்கு ஒரு காயம் ஏற்பட் டால், அது தானாகக் கூட சரியாகி விடும்.நாட்டிற்கு, சமுதாயத்திற்கு காயம் ஏற்படும் போது அமைதியாக இருந்தால் அது அதிகமாகும். கலை ஞனாகிய என் உயர்வுக்கு காரணம் மக்கள். சமுதாயத்திற்கு பிரச்சனை ஏற்படும் போது கலைஞன் கோழை யானால் சமுதாயம் கோழையாகி விடும். எனவே, பேசுகிறேன். குடிமக்கள், கலைஞர்கள், பத்திரி கைகள் நிரந்தர எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்றார் எங்கள் ஆசான் லங்கேஷ். அவர் மிகப் பெரிய பத்திரிகையாளர். எனது தோழி கவுரி லங்கேஷின் தந்தை லங்கேஷ். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி வரிசையில் தோழி கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சனாதனக் கும்பல் அவரது குரல் வளையை அடக்க நினைத்தது.

ஆனால், அதைவிட வலிமையாக குரல் எழும்பும் என்பதை உணர்த்தவே நான் பேசுகிறேன். கவுரி லங்கேஷை புதைக்கவில்லை; விதைத்திருக்கிறோம். மன்னர் (பிரதமர் மோடி) இப்போது ‘தெய்வக் குழந்தையாகி’ விட்டார். இனி அவரைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மக்களின் வியர்வை, ஸ்பரிசத்தை உணராத ஒரு பாசிஸ்ட்டால் மக்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர் தெய்வக்குழந்தை அல்ல; டெஸ்ட் டியூப் பேபி. நம்முடைய பயம்தான் அவர்களது பலம். தோல்வி ஏற்படும்போது மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படும். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஜூன் 4ந்தேதிக்கு பிறகு அவர் சென்றுவிடுவார். அதற்குப் பிறகும் நமக்கு வேலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் விதைத்ததை அகற்ற வேண்டும்.

ஒரு நீதிபதி, தன்னை ஆர்.எஸ்.எஸ் என பிரகடனப் படுத்திக் கொள்கிறார். அப்படி யென்றால் அவர் என்ன மாதிரி யான தீர்ப்புகளை கொடுத்திருப் பார்? சனாதன சக்திகளை மனிதநேய மும், இயற்கையும் ஜீரணிக்காது. அவர்கள் ஏற்படுத்திவிட்டுச் செல்லும் காயங்களில் இருந்து மீண்டுவர காலதாமதமாகும். அவ ர்கள் மீண்டும் வராமல் இருக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அம்பேத்கரைப் படியுங்கள். அம்பேத்கரைப் போன்று படியுங்கள்.

ஒரு தனிமனிதனின் கட்டை விரல் போனால் அது தனிப்பட்ட இழப்பு. ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்பட்டால் அது சமுதாயத்தின் வலி. பெரும்பான்மையின் பெரு மையே சிறுபான்மையைப் பாது காப்பதில்தான் உள்ளது. எனவே, சனாதனத்திற்கு எதிரான போராட்ட த்தைத் தொடர்வோம். அரசியல் கட்சிகள் வரும், போகும். மக்கள் தான் நிரந்தர மானவர்கள். அரசியலில் எதிர்க்கட்சி வெற்றி பெறாது. ஆனால், ஆளும் கட்சிதான் தோற்றுபோகும். சரியான வர்களை தேர்ந்தெடுக்காவிட் டால் மக்கள்தான் தோற்பார்கள். 10 ஆண்டு கால வலி, வேதனை, அவமானங்கள், அச்சம் மீண்டும் வராமல் இருக்க நாம் பணியாற்ற வேண்டும். மக்கள் தங்கள் சக்தியை உணர வேண்டும். மக்களின் குர லாக நிரந்தர எதிர்க்கட்சியாகவே செயல் படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories