இந்தியா

”பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி” : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!

மோடியை தோற்கடிக்கவில்லை என்றால் நாடு சர்வாதிகாரத்திற்கு சென்றுவிடும் என மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை செய்துள்ளார்.

”பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி” : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் சாசாராம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, " அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டம் இருந்தால் தான் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கும்.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் பேச்சு பீகார் மக்களை அவமதிக்கும் செயலாகும்.

பணவீக்கம், வேலையில்லா தீண்டாட்டம் பிரச்சனைகள் குறித்து மோடி வாய் திருப்பது கிடையாது. ஆனால் அர்தமற்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார். மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களை ஒன்றிணைக்கிறது. இதனால் தான் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை ஒருங்கிணைக்க நடைப்பயணம் மேற்கொண்டார்.

மோடி ஒரு சர்வாதிகாரி. அவர் மீண்டும் பிரதமரானால் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories