தமிழ்நாடு

”குரங்கு கையில் பூமாலை போல் ஆகிவிட்ட ஆளுநர் பதவி" : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

ஆளுநரின் செயல்பாட்டிற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”குரங்கு கையில் பூமாலை போல் ஆகிவிட்ட ஆளுநர் பதவி" :  ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார் என திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, " நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

கேரளா அரசு அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சரும் தடுப்பணை குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஒரிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களை போற்றுகிறார். பா.ஜ.க இரட்டை நிலைபாட்டுன் செயல்படுகிறது. ஆனால் தி.மு.க ஒரே நிலைபாட்டுடன்தான் இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories