தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் இல்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

“தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் இல்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வெள்ளரிக்காய் மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தற்போது பயத்துடன் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும்.

“தமிழ்நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் இல்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்சனைகள் இருக்கும் என நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளனர். இதுவரை அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவை சில்ட் தொடர்பான பின்விளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” என்று கூறினார்

banner

Related Stories

Related Stories