தமிழ்நாடு

ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!

பல ஆண்டுகளாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நபரின் வாழ்க்கையில் ஒளியேற்றிய முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்.

ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பல ஆண்டுகளாக இதய நோய் பாதிப்பினால் அவதிப்பட்ட வந்த 36 வயதுள்ள நபருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பல ஆண்டுகளாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்த ராஜேஷ் (36 வயது) என்ற நபருக்கு பிரபல தனியார் மருத்துவமனையில் (ராமச்சந்திரா மருத்துவமனை) முதல்முறையாக தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 13 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பல ஆண்டுகளாக இருந்த இதய பாதிப்பினால் பதட்டம் அடைந்து மயக்கம் ஏற்பட்டுள்ளது(ஒரு நிமிடத்திற்கு 200க்கு மேல் இதயம் துடித்து அடிக்கடி மயக்கம் ஏற்பட்டது). அவர் பல முறை அவசர சிகிச்சை பிரிவிலும், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து இரத்தக் குழாய் மூலம் அளிக்கப்பட்ட மருந்துகள் பயனளிக்காமல், வெளி டிஃபிரிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவருக்கு அதிக இதயத்துடிப்பின் காரணமாக பதட்டம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகிறார் எனவும், இதயம் மற்றும் மூளைகளுக்குச் செல்லும் இரத்தம் முறையாக செல்வதில்லை எனவும் இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவரி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நிரந்தரமாக இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்த சிகிச்சைக்கு 6 முதல் 9 லட்சம் வரை செலவாகும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் ஏழ்மை சூழல் காரணமாக அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் அங்குள்ள மருத்துவர்கள் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்துள்ளனர். அதன் பின்பு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு தற்பொழுது காப்பீட்டு திட்டத்தின் கீழ் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் மூத்த இதயவியல் நிபுணர் தணிகாசலம் பேசியதாவது,

ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
news

இதய நோய்கள் அனைத்து வயதினருக்கும் வர வாய்ப்புள்ளது. இதய நோய்களில் முதன்மையானது மின் விசை கோளாறு பிரச்சினை. இதயத்துடிப்பு அதிகரிப்பதால் இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளது.

பல மருத்துவமனைகள் சென்றும் சரியாகாத காரணத்தினால் இந்த மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பேஸ்மேக்கர் அவரது நெஞ்சுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது மின்விசையை உருவாக்கும் கருவி. இதயத்துடிப்பு அதிகரிக்கும் பொழுது இந்த ஃபேஸ் மேக்கருக்கு மெசேஜ் அனுப்பப்படும். கம்பி வழியாக சிறிய மின்விசையை உருவாக்கி அந்த படப்படப்பை சரி செய்யும்.

இந்த சிகிச்சை மேற்கொள்ள 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை செலவாகும். அதனால் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்பதை எங்கள் மருத்துவர்கள் தெரிவித்து அதிகாரிகளை அணுகி உத்தரவு பெற்று உரிய நேரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுவதுமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நலமுடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேஸ்மேக்கர் பொருத்தி சிகிச்சை அளித்த இதயவியல் நிபுணர் டாக்டர் பீரித்தம் பேசுகையில்,

ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
news

படபடப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதனால் மயக்கம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் கூட உள்ளது.

ஒரு சிலருக்கு வலது பக்க இதயம் பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. அதுபோல தான் 36 வயதுள்ள நபர் ஒருவருக்கு படபடப்பு அடிக்கடி ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரியாக அந்த நிலையில், ஷாக் கொடுக்கப்பட்டு அவ்வப்பொழுது சரி செய்து வந்துள்ளார்.

எட்டு முறைக்கு மேல் இதுபோன்று தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் நிரந்தரமாக அவரது இதயத்தில் ஐசிடி பேஸ்மேக்கர் பொருத்த பரிந்துரை செய்தோம்.

அந்த சிகிச்சைக்கு 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை செலவாகும் என்பதால், இந்தியாவில் கிடைக்காதது என்பதால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்.

இதுபோன்று யாருக்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அவர்களுக்கும் இதுபோன்று ஃபேஸ்மேக்கர்கள் பொருத்த வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

ஏழைகளின் உயிர் காக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் மாநிலம் நம் தமிழ்நாடு. அதுபோல் மக்களின் உயிர் காக்கும் உயர்தர சிகிச்சைகளை காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக தருவதிலும் முதன்மையாக விளங்குகிறது நம் திராவிட மாடல் அரசு.

அத்தகைய மக்களின் தோழனாக விளங்கும் நம் தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தின் மூலம் இனிவரும் காலங்களிலும் லட்சக்கணக்கான மக்களின் உன்னதமான உயிர்கள் காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

banner

Related Stories

Related Stories