தமிழ்நாடு

3 ஆண்டுகள் - திராவிட மாடல் அரசின் 10 மகத்தான சாதனை திட்டங்கள்!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு தொடக்கம் இன்று.

3 ஆண்டுகள் - திராவிட மாடல் அரசின் 10 மகத்தான சாதனை திட்டங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சரித்தர சாதனை படைத்து வரும் சாதனை தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டு இன்று தொடங்குகிறது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை திரும்பிப் பார்க்கும் போது பிரம்பிப்பாக இருக்கிறது.

சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்றே கூற வேண்டும்.

முதல்வர் சிந்தனையில் உதித்திட்ட சீரிய திட்டங்கள் இன்றைக்கு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் செயல்படுத்துவது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் செயல்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்றால் அது மிமையல்ல.

திராவிட மாடல் நாயகர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டு காலம் நிறைவுற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு முதல்வர் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்திய திருநாட்டு மக்களே வாழ்த்தி மகிழ்கின்றனர்.

3 ஆண்டுகள் - திராவிட மாடல் அரசின் 10 மகத்தான சாதனை திட்டங்கள்!

திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:-

1. கலைஞர் மகளிரி உரிமைத் தொகை

தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 1,16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

2. நான் முதல்வன்

ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ் என்று சிவில் சர்வீஸ் தேர்வுக்கென்று உருவாக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.

3.விடியல் பயணம்

மகளிர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்டு அமல்படுத்தப்பட்ட திட்டமாகும் இது. இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

4. புதுமைப் பெண்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

5. முதலமைச்சரின் காலை உணவு

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டமாகும்.

6. தமிழ்ப் புதல்வன்

கல்லூரியில் படிக்கும் ஆண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் படிக்கின்ற இளைஞர்கள் மனதிலும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாத வகையில் அமைந்திருக்கிறது.

7. முதல்வரின் முகவரி

பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வுகானும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் முதல்வரின் முகவரி. முதலமைச்சரே நேரடியாக இந்த மனுக்களை ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

8. தோழி விடுதி

வெளி ஊர்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த வாடகையில் நல்ல தரமான வீட்டு உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

9 மக்களைத் தேடி மருத்துவம்

மக்களின் தேவை அறிந்து அவர்களது இல்லத்திற்கே சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டமாகும். இந்த திட்டத்தில் இதுவரை 1.07 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.

10. இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் - 48 திட்டத்தைத் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படி பல சாதனை திட்டங்களை இந்த 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories