தமிழ்நாடு

”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

சரித்தர சாதனை படைத்து வரும் சாதனை தலைவர் முதலமைவ்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டு இன்று (மே 7) தொடங்குகிறது.

”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சரித்தர சாதனை படைத்து வரும் சாதனை தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டு இன்று தொடங்குகிறது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை திரும்பிப் பார்க்கும் போது பிரம்பிப்பாக இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, தோழி விடுதிகள், கீழடி அருங்காட்சியகம், மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம் என கடந்த 3 ஆண்டுகளில் உலகம் போற்றும் மகத்தான திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தி காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டு இன்று தொடங்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாட்டிற்கே வழிகாட்டும் நம் திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 - விடியல் பேருந்து பயணம் - மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் - முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் - மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் - நான் முதல்வன் - விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை - விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல் - ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொழில்துறை திட்டங்கள் - கலைஞர் நூற்றாண்டு நூலகம் - கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து வெற்றி நடைபோடுகிறது நம் தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் - ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய லட்சியத்தோடு செயல்பட்டு வரும் நம், கழக அரசின் சாதனைகளை போற்றுவோம். நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, வரவிருக்கிற நாட்களில் இன்னும் அயராது உழைப்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories