தமிழ்நாடு

தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !

தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் நீற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை அதன் உச்சநிலையை எட்டியது.

தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !

தர்மபுரியில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி 41.4℃ வெப்பம் பதிவாகியிருந்தது. இதுதான் இதுவரை தர்மபுரியில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்த நிலையில் இன்று 42.5℃ வெப்ப பதிவான வெப்பம் பதிவாகி வரலாற்றில் இல்லாத புதிய அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

அதே போல சேலத்தில் 42.2℃ வெப்பம் பதிவானது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 44.3 ℃ வெப்பம் பதிவானது. அதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கம் 100.22°F, சென்னை மீனம்பாக்கம் 104°F, கோயம்புத்தூர் 103.1°F, தர்மபுரி 108.5°F, ஈரோடு 111.2°F, காரைக்கால் 100.58°F, மதுரை நகரம் 107.6°F, மதுரை விமான நிலையம் 107.06°F, நாகப்பட்டினம் 102.2°F, நாமக்கல் 107.6°F, பாளையங்கோட்டை 104.9°F, சேலம் 107.96°F, தஞ்சாவூர் 104°F, திருப்பத்தூர் 107.96°F, திருச்சிராப்பள்ளி 108.86°F, திருத்தணி 108.14°F, வேலூர் 109.76°F வெப்பமானது பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories