தமிழ்நாடு

”ஜூன் 4 இனிப்பான வெற்றியைத் தருவோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

என் சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

”ஜூன் 4 இனிப்பான வெற்றியைத் தருவோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகக் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி எம்.பி நேற்று தமிழ்நாடு வந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து கோவை, பொள்ளாச்சி, கரூர் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சார பரப்புரையில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்திற்குப் பங்கேற்பதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக நேரடியாக இனிப்பு கடைக்கு சென்று ராகுல் காந்தி இனிப்பு வாங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

மேலும், இந்த வீடியோவை வெளியிட்டு “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்குக் கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன் - என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து ”என் சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா நிச்சயம் அவருக்கு இனிப்பான வெற்றியை அளிக்கும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories