தேர்தல் 2024

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

இட்லி, பொங்கல் பிடிக்கும் - தமிழ், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் பிரதமரின் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்குகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (12-04-2024) கோவை மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞரை வளர்த்த அன்பான மக்கள் வாழும் கொங்கு மண்ணிற்கு வந்திருக்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியையும் உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்.

கோவை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு ஆகிய தொகுதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் என் அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

கோவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்! கோவையின் வணக்கத்திற்குரிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். அதற்கு முன்னால் பதினைந்தாண்டு காலம் கவுன்சிலராகவும் இருந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தவர். அதோடு, பத்திரிகைத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை மக்கள் விரும்பும் அமைதிக் குணம் மிக்கவர் கணபதி ராஜ்குமார்! இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கோவையின் அனைத்துத் தேவைகளையும் எடுத்துச் சொல்லிப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர கணபதி ராஜ்குமார் அவர்களை கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து, வெற்றி பெற வைக்கவேண்டும்.

பொள்ளாச்சி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் ஈஸ்வரசாமி அவர்கள், கல்விப் பணியையும் சமூக சேவையையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடியவர். கடந்த பத்து ஆண்டுகளாக கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியையும் ஆற்றி வந்திருக்கிறார். அத்தகைய மக்கள் தொண்டர் ஈஸ்வரசாமி அவர்களை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க, உதயசூரியன் சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு அருமைச் சகோதரி ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.

மார்ச் 22-ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடுகளைப் போல் நடந்துக்கொண்டு இருக்கிறது! அந்த வரிசையில் இந்தக் கோவை - பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றி விழா மாநாட்டை போல் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர்கள், ஆற்றல்மிகு செயல்வீரர் முத்துசாமி அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி வரும் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், பொள்ளாச்சிக்கு பொறுப்பேற்று இருக்கும் சக்கரபாணி அவர்களுக்கும், சாமிநாதன் அவர்களுக்கும், கரூரின் செயல்வீரர் நம்முடைய அன்புக்கினிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! பாராட்டுகள்!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

மாநாடு போல நடந்துகொண்டிருக்கும் இந்தக் கோவை கூட்டத்திற்கு மகுடம் வைத்ததைப் போல், இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, தி.மு.க. தோளோடு தோள் நிற்கிறது! தி.மு.க. எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி! எப்போதும் வெல்லும் கூட்டணி, நம்முடைய கூட்டணி! அன்னை சோனியா காந்தி மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்! அப்படிப்பட்ட ராகுல் அவர்களை, நம்முடைய ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் ராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவிற்கு விடியல் தருக என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.

சகோதரர் ராகுல் அவர்களின் நடைப்பயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். ”மக்களிடம் செல்! மக்களிடம் இருந்து கற்றுக்கொள்!” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், சகோதரர் ராகுல், தன்னுடைய நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “எலக்‌ஷனின் ஹீரோ”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான். தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!

பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நீட் தேர்வு விலக்கு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றிய அரசின் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த, சட்டத்திருத்தம்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!

SC, ST, OBC பிரிவினர்களுக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவாதம்!

முக்கியமாக, இந்தக் கோவை – திருப்பூர் மண்டலத்தைக் கடுமையாக பாதித்திருக்கும் ஜி.எஸ்.டி. சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம்!

இங்கு வேளாண் பெருங்குடி மக்கள் வந்திருக்கிறீர்கள். வேளாண் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது! விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!

இப்படி மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார்.

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

மற்றொரு பக்கம் பிரதமர் மோடி அவர்கள்! எப்போதும் வெளிநாட்டு டூர்-இல் இருக்கிறவர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்று உள்நாட்டு டூர்-இல் இருக்கிறார். கூட்டங்களில் பேசுகிறாரே! அதில் எங்கேயாவது தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்று எதையாவது பேசுகிறாரா? இல்லை! அவர் பேசுவதெல்லாம், இந்தியா கூட்டணி கட்சிகளை வசைப் பாடுகிறது! அதிலும், ஒரே பல்லவி! குடும்பக் கட்சி! ஊழல் கட்சி! இதற்கெல்லாம் நான் எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டேன்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் நேராகப் பதவி வருவதில்லை. தேர்தலில் நின்று மக்களைச் சந்தித்து மக்களும் அவர்களுடன் செயல்பாடுகளை எடைபோட்டு வாக்களித்தால்தான், பதவிக்கு வர முடியும்! பிரதமர் மோடி அவர்கள், குடும்ப அரசியல் என்று எங்களை மட்டும் அவமதிக்கவில்லை! எங்களைத் தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவர் அவமதிக்கிறார்!

அதே போன்று, ஊழலைப் பற்றி பேசுவதற்கு, பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டாமா? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்க உங்களுக்குத்தான் அத்தனை தகுதியும் இருக்கிறது! தேர்தல் பத்திரம் என்று ஒரு நடைமுறையைக் கொண்டுவந்து ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியது யார், நீங்கள்தானே? மற்ற கட்சிகளும் அதில் நிதி வாங்கி இருக்கிறோம் என்றால், நீங்கள் அந்த நடைமுறையைக் கொண்டு வந்ததுதான் காரணம். ஆனால், நீங்கள் எப்படி நிதி வாங்கினீர்கள்?

E.D – I.T – C.B.I என்று உங்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக, ரெய்டு விட்டு மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்றுப் பணம் பறித்தது பா.ஜ.க.! பா.ஜ.க.விற்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மேல் எப்போது ரெய்டு விட்டீர்கள்! உடனே அவர்கள் என்றைக்குப் பணம் கொடுத்தார்கள் என்று எல்லாத் தகவலும் இப்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறதே!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

அடுத்து, பி.எம். கேர்ஸ் நிதி! இதில் வசூல் செய்த தொகையைப் பற்றி கேள்வி கேட்டால், அது தனி அறக்கட்டளை என்று சொல்கிறீர்கள்! அப்படி என்றால், அதை ஏன் பிரதமர் பெயரில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றீர்கள்? இதற்கும் பதில் இல்லை!

அடுத்து, உங்கள் ஆட்சிக்கு சி.ஏ.ஜி கொடுத்த சர்ட்டிபிகேட் என்ன? ”Seven Schemes - Seven lakh crore rupees - Mega Scam” - இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்கமாற்றீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிட மாற்றம் செய்த மர்மம் என்ன?

அடுத்து, ரஃபேல் ஊழல்! காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்திற்கு 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்கள் என்றால், பா.ஜ.க. ஆட்சியில் 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள்! இதனால் பயனடைந்தது யார் என்று, காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரை பிரதமர் பதில் சொல்லவில்லை! கார்ப்பரேட்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கடன்களைத் தள்ளுபடி செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று, சகோதரர் ராகுல் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல், தனிநபர் தாக்குதல் செய்தீர்கள்! அதுமட்டுமா!, அவரின் எம்.பி பதவியையே பறித்தீர்கள்!

பிரதமர் மோடி அவர்களே... நீங்கள் ஊழல் பற்றிப் பேசலாமா? அதுமட்டுமா!, இப்போத ஊழல்வாதிகளுக்கு கேரண்டி கொடுக்கும் “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷின் வைத்து, ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறீர்களே! இனியும் நீங்கள் ஊழலைப் பற்றி பேசினால், கிராமத்தில் சொல்வார்களே, “யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை”என்று அப்படித்தான் மக்கள் சொல்வார்கள்!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும், சாதனைகள் என்று தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், பத்தாண்டுகள் தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிசாமி! நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி, பா.ஜ.க.வின் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார்! இப்படிப்பட்டவர்களைப் பற்றி, நாங்கள் என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்”.

நம்மைப் பொறுத்தவரைக்கும், மூன்றே ஆண்டுகளில் நம்முடைய திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறது! நம்முடைய சாதனைகளைத்தான் அடையாளமாகக் காட்டி, நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் நம்முடைய திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளைப் பற்றி சொல்கிறேன்.

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில் பயனடையாத ஒரு மகளிரிடம், ஒருவர் சென்று ஓட்டு கேட்கிறார்! அப்போது அந்த நபர் அந்த அம்மாவிடம், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்ட உடனே, அந்த அம்மா, “ஸ்டாலினுக்குதான் ஓட்டு போடுவேன்”என்று சொல்கிறார்கள். “நீங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறீர்களா?” என்று அந்த நபர் கேட்கிறார்! அதற்கு அவர்கள், “இல்லை” என்று சொல்லிவிட்டு, உடனே, “எனக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன? தேவையான எத்தனையோ மக்களுக்கு உதவுகிறார். நிறைய நல்லது செய்கிறார். அதனால், அவருக்குதான் ஓட்டு போடுவேன்” என்று அந்த அம்மா சொல்கிறார்கள்.

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

இப்படித்தான் நாங்கள் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம்! நம்முடைய கூட்டணி சார்பில் பிரச்சாரத்திற்கு போகும்போது, ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் தாய்வீட்டுச் சீர் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறோம் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்!

அதுமட்டுமல்ல, நான் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, தமிழ்நாட்டில் மகளிர் சுதந்தரமாக, கட்டணமில்லாமல் விடியல் பேருந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்!

நான் அடிக்கடி ஒன்று சொல்வேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அதுவும் ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம். அதனால்தான் உயர்கல்விக்கு வர மாணவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

இதே போன்று, அடுத்து மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் என்ற பெயரில், மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம்.

இதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத் தலைமுறையான குழந்தைங்கள் ஆரோக்கியமாக, பசி இல்லாமல் படிக்கவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, 16 இலட்சம் குழந்தைகளுக்குச் சுவையான காலை உணவு அளிக்கிறோம். இது இப்போது கனடா நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்று, தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, “நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 77 இலட்சத்து 78 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதாம்! EPFO புள்ளிவிவரம் சொல்கிறது! இது மாநில அரசின் புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசுடையது!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடிப் பேருக்கும் மேல் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தி.மு.க. எப்போதும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று நிரூபித்தது மட்டும் இல்லை, இந்த ஸ்டாலின் ஆட்சியில், சொல்லாததையும் செய்வோம் என்று காட்டி இருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, உலகத்திற்கே கோவையைத் தெரியும் என்றால், அதற்குக் காரணம் அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு அவர்கள்! அவரின் இந்தக் கோவை மண்ணில், உலகத்தரத்தில் பிரம்மாண்ட நூலகத்தை அறிவியல் மையமாக திராவிட மாடல் அரசு கோவையில் அமைக்கப் போகிறது! இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் பயனடையவேண்டும் என்று பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், இவ்வளவு செய்கிறோம்! என்றால், நம்முடைய இந்தியா கூட்டணி அரசு அமையும்போது, எவ்வளவு செய்ய முடியும்! என்று நினைத்துப் பாருங்கள்! அதற்கு முன்னோட்டமாக, தி.மு.க. சார்பில் என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறோம். அதில் தலைப்புச் செய்திகளை மட்டும் சொல்கிறேன்.

வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை!

பொள்ளாச்சி இளநீருக்கும் மற்றும் தேங்காய்க்கும் புவிசார் குறியீடு!

பொள்ளாச்சியில் குளிர்பதனக் கிடங்கு!

பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைப்பு!

சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!

கோவை மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு!

மேட்டுப்பாளையம் – சத்தியமங்கலம் – கோபிசெட்டிபாளையம் - ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம்!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!

அதுமட்டுமல்ல! பத்தாண்டுகளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!

கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனும் - வட்டியும் தள்ளுபடி!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்கள் இனி 150 நாட்களாக உயர்வு! ஒரு நாள் ஊதியமாக 400 ரூபாய்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

இதையெல்லாம் இந்தியா கூட்டணி ஆட்சியில் வலியுறுத்தி நிறைவேற்றி, “தி.மு.க. சொன்னதைச் செய்யும்” என்று மீண்டும் நிரூபிப்போம்! இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?

பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது! கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது! இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள்! பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

அதுமட்டுமல்ல வங்கதேசம் கூட பா.ஜ.க. அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது! இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே! தி.மு.க. தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே! எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது! இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள்! இதுதான் கோவைக்கான பா.ஜ.க.வின் போலிப் பாசம்! எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பா.ஜ.க. தான்!

எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது!

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி “கோவை வேண்டாம்” - “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், “வேண்டாம் மோடி” இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும்! தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்!

பா.ஜ.க.கூட்டணியையும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
“இந்த தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் - பிரதமரின் போலி முகமூடி கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
banner

Related Stories

Related Stories