தமிழ்நாடு

”வெறுங்கையோடு தமிழ்நாடு வரும் பா.ஜ.க தலைவர்கள்” : தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் விமர்சனம்!

பா.ஜ.க தலைவர்கள் வெறுங்கையோடு தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

”வெறுங்கையோடு தமிழ்நாடு வரும் பா.ஜ.க தலைவர்கள்” : தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை. மோடி, அமித்ஷா நிர்மலா சீதாராமன் என தமிழ்நாட்டிற்குப் படையெடுக்கும் பா.ஜ.க தலைவர் வெறுங்கையை வீசிக்கொண்டு தான் வருகிறார்கள்..

பா.ஜ.கவால் தமிழ்நாட்டில் இந்த இந்த திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம் என்று சொல்ல முடியுமா?. எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்தோம், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு இன்னும் ஆறு மாதங்களில் பணி முடிவடையும் என்று அவர்களால் சொல்ல முடியுமா?. பா.ஜ.க என்றாலே வாயில் வடை சுடுபவர்கள் தான்.

தமிழ்நாடு ஒரு ரூபாய் நிதியாக அளித்தால் 29 பைசாதான் ஒன்றிய அரசு திருப்பி கொடுக்கிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி அளிக்கப்படுகிறது. பா.ஜ.கவின் குஜராத், உத்தர பிரதேச மாடல்கள் தோல்வியடைந்து விட்டது.

நிர்மலா சீதாராமன் கூறுவது எல்லாம் பொய் மட்டும்தான். தமிழ்நாட்டிற்கு ரூ.5000 கோடி நிதி கொடுத்ததாக கூறினார். முதலமைச்சர் அது ஒன்றியத்தின் நிதி அல்ல, ஆசிய மேம்பாட்டு நிதியிலிருந்து கடனாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைத்தான் நீங்கள் கொடுத்தீர்கள் என பதிலளித்துள்ளார். NDRF தமிழ்நாடு முதலீடு செய்த நிதியைத் திரும்ப அனுப்பினீர்கள். அது தமிழ்நாட்டின் பணம். நிர்மலா சீதாராமன் என்றாலே பொய் மட்டும் தான்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories