தமிழ்நாடு

“தமிழர்கள் எனது குடும்ப உறவு - இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர்” : நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு !

தமிழ்நாட்டின் மொழி, கலச்சாரம், தொன்மையான பண்பாடு இவற்றையெல்லாம் நான் காணும் போது, தமிழ்நாடு, இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நான் பார்க்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“தமிழர்கள் எனது குடும்ப உறவு - இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர்” : நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்து. இதில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திருநெல்வேலியில் போட்டியிடும் வேட்பாளார் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடியில் வேட்பாளார் கனிமொழி, கன்னியாகுமரி வேட்பாளார் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கப்பட் ஆகியோரும், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கேஎஸ்.அழகிரி, திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

“தமிழர்கள் எனது குடும்ப உறவு - இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர்” : நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு !

பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேனோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டைதான் நான் கவனிக்கிறேன். தமிழ்நாட்டின் மொழி, கலச்சாரம், தொன்மையான பண்பாடு இவற்றையெல்லாம் நான் காணும் போது, தமிழ்நாடு, இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நான் பார்க்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய ஆளுமைகளைத் தந்த மண் தமிழ்நாடு. சமூக நீதிபாதையில் எப்படி நடக்கவேண்டும் என நாட்டிற்கே தமிழ்நாடு வழிகாட்டியுள்ளது. அதனால்தான் இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினோம்.

நான் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் தாழ்மையுடன் தலைவணங்குவேன். தமிழர்கள் என்மீது அதிக அன்பை பொழிந்திருக்கிறார்கள். நானும் தமிழ்நாடு மீது அன்பு செலுத்துகிறேன். தமிழ்நாட்டு மக்களை குடும்ப உறவாக நினைக்கிறேன்.

“தமிழர்கள் எனது குடும்ப உறவு - இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர்” : நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு !

தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தமிழ்நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் பண்பாடும், தமிழ்மொழியும், தமிழ் வரலாறும் எனக்கான பெருமைமிகு ஆசிரியர்கள்.

இந்தியாவில் தற்போது நடப்பது சித்தாந்தப் போர். ஒரு பக்கம் பெரியாரின் சமூகநீதிக்கும், இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் மோடியின் வெறுப்பரசியலுக்கும் இடையே நடக்கும் போர். இதில் நாம் வென்றாக வேண்டும். தமிழ் வெறும் மொழி அல்ல. தமிழ் மொழி என்பது வாழ்வியல் முறை. தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்கின்றேன். தமிழ், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பேசப்படும் நாடு தான் உண்மையான இந்தியா.

பிரிட்டிஷ் காலத்தை விட இப்போதைய இந்தியா சமச்சீரற்றதாக உள்ளது. இந்தியாவின் அனைத்து வளங்களையும், ஒப்பந்தங்களையும் இரண்டு, மூன்று தொழில் அதிபர்களுக்கு தாரை வார்த்துவிட்டார் மோடி. துறைமுகம், விமானநிலையம், மின்சாரம், நிலக்கரி - சூரியசக்தி அனைத்து தொழில்கள் அனைத்தும் மோடி தனது நண்பர் அதானிக்கே தருகிறார்.

ஒவ்வொரு இளைஞருக்கும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் ஒரு வருடம் பயிற்சி பணி வழங்கப்படும். அந்த ஒரு வருடத்துக்கான ஊக்கத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். நீட் ஏழைகளுக்கு எதிரான தேர்வு. அது தேவையா இல்லையா என்கிற முடிவை தமிழ்நாடான நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.

“தமிழர்கள் எனது குடும்ப உறவு - இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர்” : நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு !

விவசாயிகள் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் நம் மீனவர்கள். அவர்களுக்கென தனி தேர்தல் அறிக்கையை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். படகுகளுக்கான டீசல் மானியம் வழங்கப்படும். படகு காப்பீடு வழங்கப்படும். மீனவர்கள் கடன் அட்டை வழங்கப்படும். உள்நாட்டு மீன்பிடிப்புத் தொழிலை விவசாயத் தொழிலாக அறிவிப்போம். இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதந்தோறும் 8500 ரூபாய் வழங்கப்படும். வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

இந்த தேர்தல் என்பது தத்துவப் போர். உங்கள் மொழியையும் பண்பாட்டையும்காப்பாற்ற உங்களோடு எப்போதும் இருப்போம். மோடியால் தமிழ் மொழியையோ, பண்பாட்டையோ தொட்டு பார்க்க முடியாது. இந்திய அரசிலமைப்பு சட்டத்தைக் காக்கும் போரில் நாம் வெற்றி பெறுவோம். இந்திய ஜனநாயகத்தை காக்கவும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்குமான யுத்தம்தான் இந்த தேர்தல். இந்த யுத்தத்தில் நாம் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். மோடி மட்டுமல்ல, இந்த உலகின் எந்த சக்தியாலும் தமிழர்களையோ தமிழ்மொழியையோ தமிழ் பண்பாட்டையோ தொட்டுப் பார்க்கக் கூட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories