தமிழ்நாடு

“பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே அத்தனை கிரிமினல் இருக்கிறார்கள்...” - அண்ணாமலைக்கு தமிழச்சி பதிலடி !

ஒரு விரலை சுட்டிக்காட்டி பேசும் பொழுது மூன்று விரல்களும் நம்மை நோக்கி இருக்கிறது என்பதை அண்ணாமலை உணர வேண்டும் என திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்துள்ளார்.

“பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே அத்தனை கிரிமினல் இருக்கிறார்கள்...” - அண்ணாமலைக்கு தமிழச்சி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கே.கே நகரில் தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது வருமாறு :

“எடப்பாடி பழனிசாமி இன்னும் எது எதுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வாரோ என்று தெரியவில்லை. மகளிர் உரிமைத் தொகைக்கு பெயரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான உரிமையை இன்று நேற்று கலைஞர் தரவில்லை, 1989 ஆண்டே இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மட்டுமில்லாமல் பல்வேறு விஷயங்களை 60, 70களிலேயே முன்னெடுத்த இயக்கம் திமுக. ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

“பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே அத்தனை கிரிமினல் இருக்கிறார்கள்...” - அண்ணாமலைக்கு தமிழச்சி பதிலடி !

தொடர்ந்து 260-க்கும் மேற்பட்ட ரவுடிகளை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று சொல்லும் அண்ணாமலையின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒரு விரலை சுட்டிக்காட்டி பேசும் பொழுது மூன்று விரல்களும் நம்மை நோக்கி இருக்கிறது என்பதனைஅண்ணாமலை உணர வேண்டும். கண்ணாடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு கல் எறியக்கூடாது, பாஜக தற்போது அளித்திருக்கும் வேட்பாளர் பட்டியலிலேயே எத்தனை கிரிமினல் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.” என்றார்.

மேலும் ஒன்றிய - மாநில அரசுகளால் நாமக்கல் மாவட்டத்தில் தொழில் முடங்கியுள்ளது. திமுக எம்.பி-க்கள் தொழில் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை, ஒரே நாளில் நான் நாமக்கல் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை முன்னேற்றுவேன் என்று கூறிய அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “அன்புமணி ராமதாஸ் அவர்கள் தற்போது ஆளுகின்ற கட்சியின் கூட்டணியில் தான் இருக்கிறார்.

“பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே அத்தனை கிரிமினல் இருக்கிறார்கள்...” - அண்ணாமலைக்கு தமிழச்சி பதிலடி !

அவர் இருந்த அதிமுக கூட்டணியில் இருந்த அந்த ஐந்து வருடத்திலேயே அதைக் கொண்டு வந்திருக்கலாம். நாங்கள் எதிர்க்கட்சிகள் எங்களால் தான் செய்ய முடியவில்லை என்றால் அவர் அதை செய்திருக்கலாம். இன்றைக்கு உலக முதலீடாக மாநாட்டை உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நடத்தி 631 MOU கையெழுத்திட்டு சாதனை படைத்திருக்கிறார். சிறு குறு தொழிற் தொடங்கும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் இந்தியாவிலேயே சிறந்த செயல்பாட்டிற்கு உண்டான விருது தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது அதனை கொடுத்தது ஒன்றிய அரசு.

பொதுமக்கள் கேள்விகள் கேட்பதில் தவறு கிடையாது அவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கின்றன. ஒரு சில இடங்களில் பட்டா போன்ற பிரச்னைகள் உள்ளது அவற்றினுடைய தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். காலை முதல் மாலை வரை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு இடத்தில் கூட எங்களுக்கு எதிர்ப்பு என்பது கிடையாது” என்றார்.

banner

Related Stories

Related Stories