தமிழ்நாடு

”மாற்றி பேச நான் பச்சோந்தி அல்ல” : எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கரூர் தொகுதியில் போட்டியிடும் ஜோதி மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

”மாற்றி பேச நான் பச்சோந்தி அல்ல” : எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணப்பாறை பெரியார் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது Go back மோடி என கூறினோம். இந்த முறை Get out மோடி என கூற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என கூறுகிறார்.

உங்களைப்போல் நேரத்திற்கு தகுந்த மாதிரியும், ஆட்களுக்குத் தகுந்த மாதிரியும் பேசக்கூடியவன் நான் அல்ல. பச்சோந்தி போல் மாற்றி மாறி பேச எங்களுக்குத் தெரியாது. பெரியார் என்ன சொன்னாரோ அதைத்தான் பேசுவேன். அம்பேத்கர், கலைஞர் என்ன சொன்னார்களோ அதை மட்டும் தான் பேசுவேன். சமூக நீதியைப் பற்றி மட்டும் தான் பேசுவேன். மாநில சுயாட்சி மட்டும் தான் பேசுவேன். மாநில உரிமைகள் மீட்பது குறித்து மட்டுமே பேசுவேன். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று பேசுவேன். சிஏஏ சட்டம் வேண்டாம் என்று தான் பேசுவேன். சிஏஜி அறிக்கை ஏழரை லட்சம் கோடி எங்கே போனது என்று கேட்பேன்.அ.தி.மு.க வேண்டுமானால் பா.ஜ.கவை கண்டு பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம்.

பிரதமர் மோடி தேர்தல் என்பதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவர் இங்கேயே தங்கி இருந்தாலும் கூட பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. ஒரு ரூபாய் மக்கள் வரியாகக் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி கொடுக்கிறார் மோடி. அதனால் தான் அவரை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் மோடி தனது நெருங்கிய நண்பரான அதானிக்கு கொடுத்து விட்டார். விமானி இல்லாமல் கூட மோடி வெளிநாடு செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories