தமிழ்நாடு

”தமிழ்நாடு என்றாலே பா.ஜ.க-வுக்கு பிடிக்காது” : கனிமொழி MP விளாசல்!

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.

”தமிழ்நாடு என்றாலே பா.ஜ.க-வுக்கு பிடிக்காது” : கனிமொழி MP விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி MP இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி, "மதத்தால் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி, இந்தியாவை பிளவுபடுத்திப் பார்க்க நினைக்கிறது பா.ஜ.க. தமிழ்நாடு என்றாலே பா.ஜ.கவுக்கு பிடிக்காது. நம்மிடம் இருந்து அனைத்தையும் சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடகாவில் போலிஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, என்னை தமிழன் என்று கூறுகிறார்கள், 'நான் இறுதிவரை கர்நாடியன்' என்று அப்போது கூறினார். இப்படி சொன்ன அண்ணாமலைதான் தற்போது கோவை தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர். கர்நாடகாவில் நின்று இருக்க வேண்டியது தானே?

நாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமர் மோடி தற்போது தேர்தல் என்பதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவர் எத்தனை முறை வந்தாலும் அவர்களது எண்ணம் தமிழ்நாட்டில் நிறைவேறாது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 500 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும், டீசல் விலை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories