தமிழ்நாடு

“EVM தயாரிப்பில் பாஜக நபர்கள் - வாக்குகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு” : திமுக வழக்கு - RS.பாரதி பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையே பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

“EVM தயாரிப்பில் பாஜக நபர்கள் - வாக்குகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு” : திமுக வழக்கு - RS.பாரதி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக வழுவான கூட்டணியாக இந்தியா கூட்டணி கட்சிகள் வழுப்பெற்றுள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்பின் படி இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என தகவல் கிடைக்கின்றனர்.

அதேவேளையில் நாடுமுழுவதும் பாஜகவுக்கு எதிரான ஏதிர்ப்பலைகள் அதிகரித்துள்ளது. இதனால் தோல்வி அச்சத்தில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு, மத்திய அமைப்புகளை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீது ஏவி அவர்களை முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது. குறிப்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அமலாக்கத்துறை மீது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் வங்கிக்கணக்கை முடக்கிய ஒன்றிய பாஜக அரசு, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி முடக்க நினைக்கிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

“EVM தயாரிப்பில் பாஜக நபர்கள் - வாக்குகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு” : திமுக வழக்கு - RS.பாரதி பேட்டி!

மேலும் உச்ச நீதிமன்றமும் விவிபேட் வாக்குகளை 100 சதவீதம் எண்ணுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியில், “இதுவரை நடைபெற்ற தேர்தலுக்கும், நடைபெறவுள்ள 2024 தேர்தலுக்கும் பெரிய மாற்றத்தை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

புதிதாக ஜெனரேஷன் 3 என்ற நடைமுறை பயன்படுத்தப்பட உள்ளது. இது எதிரானது என நாங்கள் கூறி திமுக சார்பில் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு வந்தோம். இதுகுறித்து வழக்கும் தொடர்ந்துள்ளோம். ஒட்டுமொத்த தேர்தலுக்கும் சேர்த்து வெறும் 475 மிஷின்களில் மட்டுமே சோதனை என்பது செய்துள்ளனர். அதிலும் 2% கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“EVM தயாரிப்பில் பாஜக நபர்கள் - வாக்குகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு” : திமுக வழக்கு - RS.பாரதி பேட்டி!

இ.வி.எம் மிஷின் மீதான சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இ.வி.எம் மிஷின் தயாரிக்கும் பணியில் பாஜகவை சேர்ந்தவர்களும் இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்தையும் வைத்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டியில், “தேர்தலில் வாக்காளர்கள் செலுத்தும் வாக்கு நேரடியாக கண்ட்ரோல் யூனிட்க்கு செல்லாமல் விவிபேட் மூலம் செல்வதால் அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்படி அல்லாமல் நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டிற்கு செல்லும் வகையில் உள்ள பழைய நடைமுறையை பின்படுத்த வேண்டும் என கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories