இந்தியா

’சீனாவுக்கு தூதராக மாறிடுங்க’ : மோடியை கடுமையாக சாடிய சுப்பிரமணியன் சுவாமி!

பிரதமர் மோடியை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

’சீனாவுக்கு தூதராக மாறிடுங்க’ : மோடியை கடுமையாக சாடிய சுப்பிரமணியன் சுவாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. குறிப்பாக 2014 ஆண்டு பா.ஜ.கவின் ஆட்சிக்கு பிறகே அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

இந்த ஆக்கிரமிப்பு அத்து மீறலை ஒன்றிய பா.ஜ.க அரசு தட்டிக் கேட்காமல் மவுனமாக இருந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு எதுவும் நடைபெறவில்லை எனவும் பா.ஜ.க அரசு பொய் சொல்லி வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு கூட அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. புதிய பெயரில் சீன எழுத்துகள், திபெத்தியன், பின்யின், மாண்டரின் சீனத்தின் ரோமானிய எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அப்படி ஒன்றும் பெயர்கள் மாற்றப்படவில்லை என ஒன்றிய பா.ஜ.க அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஒன்றிய மோடி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அருணாச்சலத்திலிருந்து லடாக் வரையிலான இந்திய நிலப்பரப்பை சீனர்கள் தட்டிப்பறிக்கிறார்கள். அதை தடுக்காமல் கத்திக் கொண்டிருக்கிறார் மோடி. அவர் பெய்ஜிங்கில் தூதராக நியமிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories