தமிழ்நாடு

”வாய்க்கு வந்ததையெல்லாம் உளறும் அண்ணாமலை” : தொல். திருமாவளவன் கண்டனம்!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”வாய்க்கு வந்ததையெல்லாம் உளறும் அண்ணாமலை” : தொல். திருமாவளவன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாய்க்கு வந்ததையெல்லாம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உளறிக் கொண்டிருக்கிறார். அது அவருக்குத் தனிப்பட்ட முறையில் விளம்பரத்தைத் தேடித் தருமே தவிர, கட்சிக்கு எந்த பயனையும் தராது என வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன்," எங்களுக்குப் பானை சின்னம் கேட்டு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துவிட்டோம். வி.சி.க போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் வேறு யாரும் பானை சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வில்லை. இதனால் வி.சி.கவிற்கு பானை சின்னம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜ.க மற்றும் சங்பரிவார்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பா.ஜ.க விற்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் ஆணையம் எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள்?. இந்த தேர்தல் மக்களுக்கும் பா.ஜ.க விற்கும் நடக்கும் இரண்டாவது சுதந்திரப் போர். அதில் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். பட்டியலினத்தவர், சமூக நீதிக்கு, அரசியலமைப்புக்கும் எதிரானது பா.ஜ.க.

வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அது அவருக்குத் தனிப்பட்ட முறையில் விளம்பரத்தைத் தேடித் தருமே தவிர, அவரது கட்சிக்கு எந்த பயனையும் தராது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories