தமிழ்நாடு

”ஆளுநரை எதிர்த்து பேச பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

”ஆளுநரை எதிர்த்து பேச பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி தொகுதி தி.மு.க வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு விருதுநகரில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”எங்களின் வாக்கு உதய சூரியனுக்கும், இந்தியா கூட்டணிக்கும்தான் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் சொல்லும் போது 40 தொகுதியிலும் வெற்றி உறுதியாகிவிட்டது. சொன்ன வாக்குறுதிகளை செய்து கொடுத்து விட்டதால்தான் தெம்போடும் உரிமையோடும் உங்களிடம் வாக்கு கேட்டு இங்கு நான் வந்து இருக்கிறேன்.

சமூக நீதிக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சிதான் பா.ஜ.க. ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை காலம் காலமாக தடுத்து வருகிறது. தற்போது நீட் தேர்வு கொண்டு வந்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடிக்கி வருகிறது பா.ஜ.க. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.

சீனப்பட்டாசுகளை பா.ஜ.க அரசால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை. சிவகாசியில் ரூ.1000 கோடிக்கு பட்டாசு உற்பத்தி பாதித்துள்ளது. பட்டாசு தொழிலையே நாம் செய்த ஆட்சிதான் பா.ஜ.க ஆட்சி. தேர்தலுக்குத் தேர்தல் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர் பிரதமர் மோடி. தேர்தலுக்காக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலைகளைக் குறைப்பது பச்சோந்தி அரசியல் இல்லையா?"

பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கியரண்டியும் இல்லை.. வாரண்டியும் இல்லை. வெறும் கையால் பிரதமர் மோடி முழம் போடுகிறார் என்றால் பழனிச்சாமி காத்தாலேயே கம்பு சுத்துகிறார். ஆளுநரின் செயல்களைப் பார்த்து முதலமைச்சராக இருக்கும் எனக்கு எப்படி கோவம் வருகிறதோ அதுபோல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வரவேண்டாமா?. ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்க உங்களுக்குச் சொரணை இருக்கா? இல்லையா?

மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான். பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசும் ஆளுநருக்கு எதிராக கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories